வின்னி மா” வின் விருப்பம்.
வின்னி மா” வின் விருப்பம்.
சாந்தி வெங்கடாச்சலம்
பாபாவின் பரம பக்தையான டாக்டர் வின்னி சிட்லூரி அவர்கள் பாபாவின் மகாபக்தர்களில் ஒருவரானவரும், சாய் சத்சரிதத்தின் ஆசிரியருமான கோவிந்த் ஆர்.தபோல்கருக்கு கீழ்கண்டவாறு அஞ்சலி செலுத்துகிறார். "உங்கள் அகங்காரத்தை உங்கள் குருவிடம் ஒப்படைத்து விடுங்கள். அவ்வாறு செய்யும் போது, நீங்கள் உங்கள் குருவுடன் ஒன்றி விடுவீர்கள்". இதுவே திரு. ஹேமத்பந்திடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் வின்னி சிட்லூரி அவர்கள் கூறுகிறார்.
பாபா, கோவிந்த் ஆர். தபோல்கருக்கு "ஹேமத்பந்த்" என்று பெயரிட்டிருந்தார். தபோல்கர் ஒரு ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்ததையும், பாபாவின் அனுக்கிரகத்தால் பிற்பாடு அவருக்கு அரசாங்கத்தில் வேலை கிடைத்ததையும், பின்பு சாய் பாபாவைச் சந்திக்க ஷிர்டிக்கு வந்ததையும், அங்கு பாபா கோதுமை அரைக்கும் லீலையைக் கண்டதையும் பற்றி சிட்லூரி அவர்கள் பேசுகிறார்,
தான் கண்டவற்றையெல்லாம் பதிவு செய்ய தபோல்கர் பாபாவால் தூண்டப்பட்டார். அதை மனதில் இருத்தி, எதிர்காலத்தில் அவருடைய கடமையை நிலைநிறுத்தும் விதமாக பாபா அவருக்கு "ஹேமத்பந்த்" என்று பெயரிட்டார். இவ்வாறு, பாபாவின் ஆசீர்வாதத்துடனும், அனுமதியுடனும், பாபாவின் அனைத்து பக்தர்களாலும் பெரிதும் போற்றப்பட்டு வணங்கப்படும் "சாய் சத்சரிதம்" என்ற புனித நூலை அவர் எழுதத் தொடங்கினார்.
இப்பணி ஹேமத்பந்த் என்பவரை ஒரு மனிதராக எவ்வாறு மாற்றியது என்பதை டாக்டர் வின்னி சிட்லூரி தனது நூலில் வலியுறுத்துகிறார். மராத்தியில் கவிதை வடிவில் எழுதப்பட்ட ஹேமத்பந்த் அவர்களின் மூல சத்சரிதை பற்றியும், அதன்பிறகு மொழிபெயர்க்கப்பட்ட மற்றும் பதிப்பு செய்யப்பட்ட பதிப்புகள் பாபா உரைத்த வார்த்தைகளுக்கு எவ்வாறு நீதி செய்யத் தவறிவிட்டன என்பதைப் பற்றியும் வின்னி மா நமக்குப் பற்பல விவரங்களைத் தருகிறார்.
அவர் மேலும், “என்றாவது ஒருநாள், யாராவது பாபாவின் வார்த்தைகளை, அவர் பேசியதன் சாரத்தை வெளிக் கொண்டு வருவார்கள் என்று டாக்டர் வின்னி சிட்லூரி பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தார்”.
ஆம்! அந்த நம்பிக்கை வீண் போகவில்லை!! கடந்த நூறாண்டு காலமாக எத்தனையோ கற்றறிந்தோர், அறிஞர்கள், பண்டிதர்கள் எனப் பலர் சாய் சத்சரிதத்திற்கு விளக்கவுரை எழுதியிருந்தாலும் நமது ஆத்ம ஞான குருவும், மௌனோபதேசினியும், குண்டலினி யோகியுமான திரு. "யோகி ஸ்ரீராம் பாபா" அவர்கள் “சாய் மகாராஜ் குருவைத்தேடி” ஆன்மிக மாத இதழில் எழுதி வரும் "சாய் சரிதை”யிலும்,
ஒவ்வொரு ஞாயிறு அன்றும் நேரடியாக சாய் அன்பர்களுக்கு கூறி வரும் சாய் சத்சரித விளக்க உரையும், டாக்டர் வின்னி சிட்லூரி அவர்கள் கொண்ட “என்றாவது ஒருநாள், யாராவது” என்ற நம்பிக்கைக்கு 108 ஆண்டுகள் கழித்து நமது “யோகி ஸ்ரீராம் பாபா” மூலம் ஆத்ம ஞான கருத்துக்கள் விதைக்கப்படுவது, நமக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஹேமாட்பந்த் அவர்களால் எழுதப்பட்ட பாபாவின் கருத்துக்களில் உள்ளடங்கிய “ஆத்ம ஞான” த்தை வெளிப்படும் என்பது சத்தியம்.
உள்ளதை உள்ளபடி விளக்கினால் இங்கு கிடைப்பதும் கிடைக்காமல் போகும் என்பதை நன்கறிந்தும் தனது சற்குரு சாய்நாதரால் உணர்த்தப்பட்ட ஆத்மஞானத்தை எவ்வளவு சிரமம் ஏற்பட்டாலும், எவ்வளவு பகை வந்து சேர்ந்தாலும், கொள்வார் எவர் வரினும், உண்மைக் கருத்தை ஒளிக்காமல் அள்ளி அள்ளிக் கொடுப்பேன் என்ற உறுதியுடன் ஆத்மஞானம் போதிக்கும் யோகி ஸ்ரீராம் பாபா அவர்களின் தோளோடு தோள் நிற்ப்போம் என்று உறுதி ஏற்போம்.
வாழ்க நமது குருவின் பணி, வளர்க அவரது புகழ் எட்டுத்திக்கும்.
குரு வாழ்க. குருவே துணை.
ஓம் சாய்ராம்.
*******